ஹோட்டலில் போதை விருந்து- 12 பேர் கைது

முகநூல் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகநூல் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரும் விருந்தினை ஏற்பாடு செய்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மாத்தறை, நாரம்மல, அம்பதென்ன, உக்குவலை, கம்பளை, நுவரெலியா மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles