9ஆவது பாராளுமன்றத்தில் ஜீவன் நிலைநாட்டவுள்ள சாதனை!

பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 25 – 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக இருக்கின்றது. இதில் நால்வர் 30 வயதுக்கும் குறைந்தவர்களென நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 41 -50 வயதுக்கிடைப்பட்ட 68 உறுப்பினர்கள் வாக்களிப்புமூலம் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு இளம் வயதுடைய உறுப்பினராக 1994 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவாகியுள்ளார்.

நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் துமிந்த திஸாநாயக்கவே 25 வயதில் பிரதி அமைச்சர் பதவியை வகித்துள்ளார். 25 -30 வயதுக்குட்பட்ட 4 உறுப்பினர்களுமே பட்டதாரிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 54 பேரும், 61 -70 வயதக்கிடைப்பட்ட 37 பேரும் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் உள்ளடங்குகின்றனர்.

71 -80 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கும் அதேவேளை 81 வயதை தாண்டிய இரு உறுப்பினர்களில் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். மேலும் சில உறுப்பினர்களின் தகவல்கள் இன்னும் பதியப்படவில்லை.

Related Articles

Latest Articles