எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல 9 வளைவு பாலத்தை பார்வையிடச்சென்ற எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் 9 பேரும், பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 10 பேரும் தெமோதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைகளின் பின்னர் அனைவரும் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
3 சிறார்கள் உட்பட 9 எகிப்து நாட்டு பிரஜைகளும், அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிலுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
