மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தின சேனை காட்டை அண்டிய பகுதியில் கொக்குகளை வேட்டையாடச் சென்றவர்களின் துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வாழைச்சேனை, செம்மன் ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் கொக்குகளை குறிபாத்துச் சுட எத்தனித்தபோது துப்பாக்கி வெடித்ததில் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்த தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அவருடன் கூடச் சென்ற நண்பனான 52 வயதுடைய ஆசிரியர் ஒருவரைப் பொலிஸார் சந்தே கத்தில் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை களை வாழைச்சேனை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.