கம்பளை நகரில், கண்டி – கம்பளை வீதியில் உள்ள கோழி இறைச்சி மொத்த விற்பனை நிலையத்தில் நேற்றிரவு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரை வழியாக, முகத்தைமறைத்தவாறு உள்நுழைந்துள்ள திருடன், 16 கிலோ கோழி, 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தேயிலை பக்கெட்டுகளை களவாடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கோழிக்கடை உரிமையாளரால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.