உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை உண்மையாகவே நடாத்தியவர்கள் யார் என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை வெளிப்படுத்துவதற்கு தயார் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அவரின் அறிவிப்பு தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து விசாரணைகளை நடாத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
