முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி அவரிடம் நாளை (25) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே நடாத்தியவர்கள் யார் என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை வெளிப்படுத்துவதற்கு தயார் எனவும் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கண்டியில் வைத்து தெரிவித்திருந்தார்.
அவரின் அறிவிப்பு தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து விசாரணைகளை நடாத்துமாறு கோரி, பல தரப்பினரும் சிஐடியின் நேற்று முறைப்பாடு தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மைத்திரி தொடர்பில் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. அவரிடம் சிஐடியினர் இது சம்பந்தமாக வாக்குமூலம் பெறவுள்ளனர்.
