யாழில் ஐந்து வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ஆஸ்துமாவால் சிறுவன் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர்.

ஆனாலும், அதைச் சிறுவனுக்கு வழங்கவில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை சிறுவன் நோயால் துடித்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான்.

மரண விசாரணைகளை திடீர் இறப்புவிசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். பெற்றோர் சிறுவனுக்கு உரிய சிகிச்சையளித்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles