கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளை கண்டித்தும் தொடரும்  நிருவாக செயற்பாடுகளில் அத்துமீறிய தலையீடுகளுக்கு தீர்வு காணும் நோக்குடனும் அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நேற்று (25) காலை ஆரம்பிக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை முன்னிறுத்திய வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

திட்டமிடப்பட்டு கல்முனை வடக்கு பிரதேய செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்த நிலையில் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை வழச்கும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் எனவும்,தொடர்ச்சியாக இப்போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 17.107 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் 36346 சனத்தொகையினையும் 23217 வாக்காளர் எண்ணிக்கையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவனை, நற்பட்டிமுனை, சேனைக்கு குடியிருப்பு மணற்சேனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகம் ஆகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது உள்நாட்டளர்கள் அமைச்சினால் 1989 ஆம் ஆண்டு உதவிய அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனது சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அது ஸ்தாபிக்கப்படும் போது “கரைவாகு வடக்கு (தமிழ்) பிரிவு என குறிப்பிடப்பட்டது. தற்போது “கல்முனை வடக்கு” எனவும் சில இடங்களில் “கல்முனை தமிழ் பிரிவு” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு 1989/ 4/ 6 ஆண்டுகளில் திரு வி அழகரட்டணம், பின்னர் 1991/ 4/30 திகதி திருமதி கே .பாலசிங்கம் அவர்களும் பின்னர் திரு எஸ் அருண்ராசா அவர்களும் உதவி அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டனர் .

இதேவேளை உள்நாட்டளர்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 1993 /3/ 17ஆம் தேதி மற்றும் 1993/03/ 31-ம் தேதி அமைச்சரவை மசோதாக்களின் ஊடாக இலங்கையில் காணப்படும் சில உதவி அரசாங்கதிபர் பிரிவுகள் மற்றும் உப அலுவல்களை பிரதேச செயலகங்களாக மாற்றுவதற்காக முன்மொழியப்பட்டது. அதில் கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரிவு)ம் அதில் உள்ளடங்கப்பட்டிருந்தது.

அமைச்சரவை உப பிரிவுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 1993/ 7 /9ஆம் தேதி அறிக்கையின் அடிப்படையில் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு உள்ளடங்கலாக 28 பிரதேச செயலக பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு 1993/ 7/28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது. 1993/7/28-ம் தேதி அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவை அலுவலகத்தினால் உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் 1993/ 8/4 ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது .

அதன் அடிப்படையில் அன்றிலிருந்து இன்று வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனித்துவமான பிரதேச செயலகமாக தொழிற்பட்டு வருகின்றது. உள்நாட்டு அலுவலகம் அமைச்சு அம்பாறை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதன் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது .

இதேவேளை குறித்த போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles