தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடியது.
இதன்போதே தொழில் அமைச்சரால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதம் 12, 500 ரூபாவாகும். அந்த தொகை 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 17 ஆயிரத்து 500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

