தெஹியத்தகண்டி – மஹியங்கனை வீதியின் மில்லத்தேவ பகுதியில் இபோச பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
மஹியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவர் உட்பட மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கிராதுருகொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராதுருகொட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
ராமு தனராஜா










