இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சீனா தொடர்ச்சியாக ஆதரவளிக்குமென சீன பிரதமர் Li Qiang இதன்போது தெரிவித்துள்ளார்.
பொருளாதார பின்னடைவின் பின்னர் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றத்தையும் சீன பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.
இதனிடையே, சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(27) அந்நாட்டின் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, பிரதமரின் விஜயத்திற்கு இணையாக சீனா மற்றும் இலங்கை இடையில் நேற்று(26) 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
