பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இதொகாவின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சூளுரைத்திருந்தது. ஆனால் இன்று 27 நாட்கள் கடந்துவிட்டன. எனினும், சம்பள உயர்வு தொடர்பில் முன்னேற்றகரமாக எதுவும் நடக்கவில்லை.
இதற்கு இதொகாவின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரின் கூட்டு நாடகமே பிரதான காரணமாகும். ஆளுங்கட்சி பக்கம் நின்று பதவிகளை வகித்தாலும், அந்த பதவிநிலையை தொழிலாளர்களின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக அரசை திருப்திப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
தங்களின் இந்த கூட்டு நாடகத்தை மூடிமறைக்கவே ஏனைய தொழிற்சங்கங்கள்மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.” -எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
		
                                    









