அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனமேந்து மாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் அறையில் இருந்து யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியொருவரே சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த யுவதி புதன்கிழமை (10) மாலை இளைஞரொருவருடன் குறித்த ஹோட்டலுக்கு சென்றுள்ள நிலையில், இருவரும் அங்குள்ள அறையொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது, குறித்த யுவதி திடீரென மயங்கி விழுந்துள்ளதாக அவருடன் தங்கியிருந்த இளைஞன் ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.