பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த வேலாயுதம் கிருஷ்ணன் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுநரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட ஒரு பிரச்சினையே இவ்வாறு கொலை நடப்பதற்கு காரணம் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . உயிரிழந்த நபரின் கழுத்து பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை 8சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.மேலதி விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி
