தலவாக்கலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நிருபர்கள் செதி பெருமாள், கௌசல்யா

Related Articles

Latest Articles