இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.

ஈரானின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்கவே ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார் என தெரியவருகின்றது.

ஒரு நாள் பயணமாகவே அவர் இலங்கை வரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்நிகழ்வில் பங்கேற்பார்.
இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Related Articles

Latest Articles