சஜித் அணி எம்.பிக்களுக்கு ரணில் வலை: மே தினத்தில் மேடையேறுவார்களா?

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துபோடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சி இன்னும் வெற்றியளிக்கவில்லை என தெரியவருகின்றது.

குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடையேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. எனினும், ஒரிருவர் மாத்திரமே ஜனாதிபதி ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிரணியில் இருந்து ஆதரவு வழங்கும் உறுப்பினர்களை கூடியவிரைவில் விளைத்துபோடுமாறு ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள, நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் எதிரணி உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles