தியத்தலாவை- Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார்.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த சிறுமி பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக இராணுவ ஊடகப்பேச்சாளர், மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்தார்.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குழஒhடைட கார் பந்தய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளிக்கவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
ராமு தனராஜ்