சீரற்ற காலநிலையால் மரம் முறிந்து விழுந்ததில் ஹேவாஹெட்ட – தெல்தோட்டை பிரதான வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஹேவாஹெட்ட – தெல்தோட்டை பிரதான வீதியில் நூல்கந்தூர பகுதியிலேயே மரம் முறிந்து விழுந்துள்ளது.
பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து மற்றும் கற்பாறைகளும் சரிந்து வந்துள்ளன,
இதனால் சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டு இருந்த நிலையில் அதன் பிறகு மக்கள் மரங்களை அகற்றி போக்குவரத்து வழமை போல் திரும்பியது.
