கொழும்பில் சில வீதிகள் இன்றிரவு மூடப்படும்!

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் இன்று (25) நள்ளிரவு மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தவ கூறினார்.

இதன்படி, கொழும்பு நகரின் பிரேக்புறுக் பிளேஷ், பொரள்ளை மயான சுற்றுவட்டம் முதல் தும்முல்லை சந்தி, பௌத்தாலோக்க மாவத்தை, சேர் லேஸ்டர் ஜேம்ஸ் சுற்றுவட்டம் முதல் ரொடுன்டா சுற்றுவட்டம் வரையான வீதி இவ்வாறு மூடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles