“ 2009 மே 18 இல் யுத்தம் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“ யுத்தமொன்று முடிவடைந்த பின்னர் சமாதானத்தின் பலனைக் கூட சரிவர இச்சமூகம் பெறவில்லை. சமாதானத்தின் பலன்கள் சரியாக கிடைத்திருந்தால் இங்குள்ள பாடசாலைகள் கூட தேசிய பாடசாலைகளாக மாறியிருக்க வேண்டும்.
பெயர் பலகையுடன் சுருங்கிய தேசியப் பாடசாலைகளை இங்கு நாம் நாடவில்லை. ஆனால் இங்கு அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. இன்னும் கூட இப்பிரதேசங்களில் யுத்தத்தால் அழிந்து போன பாடசாலைகள் இருக்கின்றன. சமாதானம் ஏற்பட்டு 15 வருடங்களாகின்றன. யுத்தத்தை வெற்றி கொண்டதற்காக எத்தனை தடவை வாக்களித்தீர்கள். இன்னும் எமக்கு யுத்தத்தை காரணம் காட்ட முடியாது. இப்பிரதேச பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் நீதி நியாயம் நிலைநாட்டப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத வரலாற்றில், அரசியலால் நம்பிக்கையிழந்து போயுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய நம்பிக்கையை என்னால் மாத்திரமே வழங்க முடியும். வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் தாம் மாத்திரமே எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்காக சேவைகளை முன்னெடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 202 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், திருகோணமலை, கோமரங்கடவல மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 26 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.