அடுத்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தெரியவருகின்றது.
கட்சியிலிருந்து பொன்சேகாவை விரட்டுவதற்கு சஜித் தயாரானாலும் நீதிமன்றத்தைநாடி, அதற்கு தடை உத்தரவை பொன்சேகா பெற்றுக்கொண்டார். அத்துடன், கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளையும் விமர்சித்துவருகின்றார்.
முன்னாள் படை அதிகாரிகள் பலரும் சஜித்துடன் சங்கமித்துவருவதால் பொன்சேகா கடுப்பில் உள்ளார். இந்நிலையில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை அவர் முன்னெடுத்துவருகின்றார் என சஜித் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொன்சேகாவை சமரசப்படுத்த, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவிக்குமாறு பொன்சேகா அழுத்தம் கொடுத்துவருகின்றார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எந்தவொரு தேர்தலிலும் களமிறங்க பொன்சேகாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமளிக்கப்படமாட்டாது என்ற முடிவை சஜித் எடுத்துள்ளார்.