மஹியங்கனை அலேவெல பகுதியில் 630 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரவத்த மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் பொலிஸ் அதிகாரி ஒருவர் முகவர் போல் சென்று சந்தேக நபரிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய போது சந்தேக நபர் பிடிப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரிடம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் நியமித்த முகவருக்கு விற்பனை செய்த முற்பட்ட போது கைப்பற்றப்பட்டதாகவும் பின்னர் விசாரணையின் போது மேலும் 500 மில்லிகிராம் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தனவின் ஆலோசனையின் பேரில், பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பலிபான மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப டபிள்யூ.டபிள்யூ.எம்.விஜேரத்ன,
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி போசா ஜயசரத்ன. (66024), போசா ஹேரத் (40981), போகோ பிரேமரத்ன 81362, போகோ தாரக (81655) கபோகோ மலிகா (9121) மற்றும் நிரோஷா (9661) ஆகியோர் இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு மேலதிக விசாரணைக்கு. மேற்கொள்ள உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா