ஐ.தே.கவின் கோரிக்கை அடியோடு நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை குறைந்தபட்சம் ஈராண்டுகளுக்காவது ஒத்திவைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கையை பிரதான அரசியல் கட்சிகள் அடியோடு நிராகரித்துள்ளன.

ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்துள்ள இந்த யோசனைக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் மேற்படி கட்சிகள் அறிவித்துள்ளன.

ஆளுங்கூட்டணியின் பங்காளியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி என்பனவே, இவ்வாறு தெரிவித்துள்ளன.

“ ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது, அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு இடமளிக்கபோவதும் இல்லை, ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது, தோல்வி பீதியாலேயே  ஜனாதிபதி தரப்பு குறுக்கு வழியில் முயற்சிகளை முன்னெடுக்கன்றது.” – எனவும் மேற்படி கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Articles

Latest Articles