முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞரொருவர் புலனாய்வு பிரிவினரால் யாழில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருளுடன் இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
முல்லைதீவு மாவட்டத்தின் விஸ்வமடுப்பகுதி இருந்து பஸ் மூலம் ஸ்பிறிற் எனும் போதைபொருளை கடத்த முற்பட்ட பொழுது யாழ் நகரில் வைத்து குறித்த இளைஞரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன் போது விஸ்வமடு பகிதியைச் சேர்ந்த இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தி உள்ளதாக தெரிய வருகிறது.