பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் முன்வைத்த காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்வைக்க கூடாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
“ பெருந்தோட்ட நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள் ஜனாதிபதிக்கு கட்டுப்பட மறுக்கின்றனர், தொழில் அமைச்சருக்கும் கட்டுப்பட மறுக்கின்றனர். இதனை சரியாக நிர்வகிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிறுவனங்களுடனான குத்தகை உடன்படிக்கை இரத்து செய்யப்பட வேண்டும்.” -எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.










