நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
ஒரு லிட்டர் லங்கா ஒட்டோ டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.
ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 202 ரூபாவாகும்
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
சிபெட்கோ எரிபொருள் விலையும் (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.