தெற்கு அரசியலில் இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி தாவலொன்று இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 04 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது எதிரணி உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, ஆளுங்கட்சியுடன் இணைவார்கள் என அறியமுடிகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், 4 ஆம் திகதி கட்சி தாவல் உறுதியெனவும் ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.