ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் (டி பிரிவு) மல்லுக்கட்டுகிறது.
எய்டன் மார்க்ராம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 11 ஆட்டங்களில் 9-ல் தோற்றுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தலைமையில் இலங்கை அணி களமிறங்கும்.
இரு அணிகளும் உலகக் கோப்பையை வெற்றியோடு தொடங்குவதில் தீவிர முனைப்பு காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 12-ல் தென்ஆப்பிரிக்காவும், 5-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.