நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளனர், 41 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், நாட்டில் 23 மாவட்டங்களில் 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 ஆயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
