ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 17 ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அந்த விசேட அறிவிப்பு மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதாகவே இருக்கும் எனவும் தெரியவருகின்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன அறிவித்திருந்தாலும் மொட்டு கட்சி மௌனம் காத்துவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை வளைத்துபோடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஜுன் 15 ஆம் திகதிவரை அவகாசம் வழங்கியுள்ளது.
அந்தகாலப்பகுதிக்குள் ரணில் அதை செய்ய தவறும்பட்சத்தில் 17 ஆம் திகதி தம்மிக்க பெரேராவை மொட்டு கட்சி வேட்பாளராக மஹிந்த பெயரிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.