ரணில் – மஹிந்த தீர்க்கமான சந்திப்பு: நடக்கபோவது என்ன?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று வெகுவிரைவில் நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இவ்வாரம் அல்லது ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மொட்டு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கேட்டறிவதும், அரசின் எதிர்கால பயணபாதை பற்றியும் கலந்துரையாடும் நோக்கிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கேட்டறிந்த பிறகே தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் முடிவை மொட்டு கட்சி எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles