நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே 15 ஆம் திகதி முதல் இன்றுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
71 வீடுகள் முழுமையாகவும், 9 ஆயிரத்து 378 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 835 வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
