2025 ஜனவரியில் பொதுத்தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தகையோடு பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாக தென்படுகின்றது எனவும், 2025 ஜனவரி மாதமளவில் அத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் இல்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதி.

ஏனெனில் தற்போதைய ஜனாதிபதியின் கட்சி ஆட்சியில் இல்லை, நாடாளுமன்றத்தின் ஆதரவு இருந்தால் ஜனாதிபதியால் சிறப்பாக இயங்க முடியும். எனவே, ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற்றாலும், அத்தேர்தல் முடிந்த கையோடு பொதுத்தேர்தல் நடக்கும். பெரும்பாலும் ஜனவரி முதல் வாரமளவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படக்கூடும்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அவ்வாறு அவர் செய்வார் என நம்புகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles