கொத்து, பராட்டா, ரைஸ் விலைகள் குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பிற்கு அமைய, சில உணவுப் பொருட்களின் விலைகள் நேற்று(05) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட வேறு சில உணவுப் பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles