மின் கட்டணம் குறைகிறது!

மின்சார கட்டணத்தை ஜுலை முதலாம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு பாவனைக்கான கட்டணத்தில் அதிக சலுகையை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், இலங்கை மின்சார சபையினால் நாளை (07) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles