கம்பளை, நவ குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுந்துவத்த நகரில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ கொளுந்துவிட்டெரிந்ததால் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளது என தெரியவருகின்றது.
தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் நவ குறுந்துவத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
