ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் இந்நாடு பிளவுபட்டு காசாவின் நிலையே எமக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, ராஜபக்சக்களை ஒருபோதும் மறக்க முடியாது. இது மக்களுக்கும் தெரியும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களின் ஆதரவு தேவையில்லை என நிமல்லான்சா தரப்பு கூறியுள்ள நிலையிலேயே மொட்டு கட்சி எம்.பி. இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ராஜபக்சக்களால்தான் நாம் சுவாசிக்கின்றோம். ராஜபக்சக்களால்தான் இந்நாடு பிளவுபடுவது தடுக்கப்பட்டது. ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் காசாவின் நிலைதான் இங்கு ஏற்பட்டிருக்கும். ராஜபக்சக்களால்தான் நாடு அபிவிருத்தி அடைந்தது.
இன்று ராஜபக்சக்கள் விமர்சிப்பவர்கள் ராஜபக்சக்களின் புண்ணியத்தால் நாடாளுமன்றம் வந்தவர்கள். அவர்கள் மறந்தாலும் ராஜபக்சக்களை எம்மால் மறக்க முடியாது. மொட்டு கட்சியின் ஆதரவு இன்றி எவராலும் ஆட்சி அமைக்க முடியாது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமது கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதியுடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். எனினும், கட்சி எடுக்கும் முடிவின் பிரகாரமே நாம் செயற்படுவோம்.” – என்றார்.