நாட்டில் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல்,சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 100 மி.மீ. மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.