வீதியை புனரமைத்து தருமாறுகோரி மக்கள் போராட்டம்

பசறை – மடுல்சீமை வீதி மாதோவ சந்தியில் இருந்து மாதோவ கீழ் பிரிவின் ஊடாக லுணுகலை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் வரையிலான வீதியை புனரமைத்து தருமாறுகோரி இன்றைய தினம் மஹதோவ கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வீதியை புனரமைத்து தருவதாக கூறி பல அரசியல் வாதிகள் அடிக்கல் நாட்டியதாகவும் ஆனால் இதுவரை வீதி புனரைமைத்து தரவில்லை எஎனவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 200 மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles