அமைச்சர் மனுச நாணயக்காவின் கோரிக்கையை ஏற்று, தமிழ் பாடலொன்றை பாடி அமைச்சரையும், கூட்டத்தில் பங்கேற்றோரையும் மகிழ்வித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்.
“பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க…” எனும் பாடலையே அவர் பாடியுள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானும் பங்கேற்றிருந்தார்.
இக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுச நாணயக்கார,
“ இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இங்கு வந்துள்ளார், இந்த மாவட்டத்தில் மேலும் சில எம்.பிக்கள் உள்ளனர். அவர்கள் கொழும்பில் வைத்து எம்முடன் நட்பாக பழகுவார்கள், ஜனாதிபதியை சந்திப்பார்கள். ஆனால் நாம் இங்கு வரும்போது அந்நிகழ்வுகளுக்கு அவர்கள் வருவதில்லை. அதுதான் இரட்டை முகம் என்பது.
இங்கு வந்துள்ள பிள்ளையானிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன்.” – எனக் குறிப்பிட்டு, உங்களுக்கு பிடித்த பாடல் எது என பிள்ளையானிடம் அமைச்சர் வினவினார்.
“ அட…தமிழ் பாடல்தான், பொன்வானில் நீ உறங்க..” என சிரித்தப்படியே பிள்ளையான் பதிலளிப்பார்.
“ பிள்ளையான் என்றதும் எமக்கு வேறு விடயம்தான் சிந்தனைக்கு வரும், போராளி என்பது அது. ஆனால் பிள்ளையானிடம் உள்ள அற்புதமான மனிதன் எமக்கு வேண்டும்,” எனக் கூறி பிள்ளையானை பாடல் பாட அழைப்பார் அமைச்சர்.
“ நான் பெரிய பாடகன் அல்லன், கேட்டதால் ஓரிரு வரிகள்தான் பாடுகின்றேன்.” எனக்கூறி பிள்ளையானும் எழுந்துவந்து, பாடலை பாடினார்.
அமைச்சர் மனுச விசில் அடித்து, பிரதமாதம் எனக்கூறி பிள்ளையானை உற்சாகப்படுத்தினார்.
ஓரிரு வரிகளை பாடிய பின்னர், பிள்ளையானும் சிரித்தபடியே தனது ஆசனத்துக்கு சென்றுவிட்டார்.