ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தம் இரத்து

இயலுமை இருந்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணி குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்குரிய சட்ட ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

22-05-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வாழ்க்கைச் செலவு மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய நாளாந்த ஊதியத்தை மதிப்பிடுமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளருக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கும் குறித்த சம்பளத்தை வழங்குவதற்கான திறனை தீர்மானிக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இயலுமை இருந்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட உள்ளன.

 

Related Articles

Latest Articles