கெசல்கமுவ ஓயாவில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் பலாங்கொடை, டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மாணிக்கக்கழ் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நிருபர்










