ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ரணில் ஆதரவு அலை வீசத்தொடங்கியுள்ளது.
இதன்படி 12 மாவட்ட தலைவர்களும், 50 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேற வேண்டிவரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த ஆட்சியில் பிரதமர் பதவியை மொட்டு கட்சி பெற்றுக்கொள்ளலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்திலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
