ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்துவதற்குரிய கால எல்லை இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.
வேட்புமனு தாக்கல் நாளை (15) இடம்பெறவுள்ளது.
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழு வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு வரக்கூடிய அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர் மற்றும் ஏனைய இருவர் உட்பட மூவர் மாத்திரமே வேட்பு மனு தாக்கல் பிரிவுக்கு வரவேண்டும்.
வேட்பு மனு தாக்கல் தொடர்பில் ஆட்சேபனை முன்வைக்கவும் அவகாசம் வழங்கப்பட்டு, அதன்பின்னர் ஏனைய நடவடிக்கைகள் இடம்பெறும்.
வேட்பு மனு தாக்கலின் பின்னர் தேர்தல் ஆணைக்குழு வளாக பகுதியில் பேரணிகளை நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.










