நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதியை இன்று சந்தித்து தமது ஆதரவை உறுதிப்படுத்தினர்.
அத்துடன், தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.










