இன்று வேட்பு மனு தாக்கல்: 40 வேட்பாளர்கள் போட்டி!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் இடம் பெறுவதுடன் 11 மணி முதல் 11.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. மொத்தமாக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஜூலை 26 ஆரம்பமானதுடன் நேற்று நண்பகலுடன் அந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றன.

அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 20 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் 17 சுயாதீன வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே வேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4,5,6 ஆகிய தினங்களில் தபால் மூல வாக்களிப்புக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles