ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிளவர் வீதியில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
வேலுகுமார் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தராகவும் செயற்படுகின்றார்.










