“ நான் இன்னமும் இதொகாவில்தான் இருக்கின்றேன். அக்கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன்.” – என்று நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேலு தெரிவித்தார் .
ரவி குழந்தவேலு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துவிட்டார் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் அரசியல் கற்றவன் நான். எனவே, ஒரு போதும் காங்கிரஸை விட்டு விலகிசெல்ல மாட்டேன்.
நான் சஜித் பிரேமதாசவோடு இணைந்துவிட்டேன் என பரப்பபட்டு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
எனது உயிர் மூச்சி இருக்கும் வரை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஊடாகவே அரசியல் பயணத்தை முன்னெடுப்பேன்.”- எனவும் ரவி குழந்தைவேலு குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்